Kwplite Slide

எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.
Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

கம்பன் இலகுவின் முக்கிய செயல்பாடுகள்:

  • முழுக்க முழுக்க ஒன்றியல்குறி (Unicode) உபயோகிப்பதற்கு வசதியாகவும் தற்போதைய மைக்ரோஸாஃப்ட் இயக்க அமைப்பு-10-ல் (Microsoft Windows-10) கூட இயங்கும் வசதியாகவும் அமைக்கப்பட்டது.
  • மொத்தம் 7 மொழிகளை உட்கொண்டது: ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம்.
  • ஆங்கிலம் தவிர 3 வகை விசைபலகை அனைத்து மொழிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது: DOE, தட்டச்சு மற்றும் ஒலிப்பியல்.
  • தமிழ் மொழிக்கு மட்டும் மேலும் இரு வகை விசைப்பலகை கொடுக்கப்பட்டுள்ளது:  தமிழ்நாடு அரசு - TN99 மற்றும் பிரத்தியேக கம்பன் விசைப்பலகை.
  • மூன்று வித உருக்கள் கொண்டது: TAM, TAB மற்றும் ஒன்றியல்குறி. TAM / TAB  இவை இரண்டும் தமிழ்நாடு அரசாங்க குறிப்பாகும். ஒன்றியல் குறி உருவில் 7 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அகராதியும், முற்போக்கு சொல் தேடும் அமைப்பும் கொண்டது. தற்போது, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு அகராதிகள் உள்ளடக்கம்.
  • விசைப்பலகையை அடிக்கும் போதே சொற்களை பூர்த்தி செய்யும் வசதி கொண்டது. இது விசைப்பலகை உபயோகிப்பதற்கு சுலபமாக அமைக்கப் பட்டதாகும். இதைத்தவிர, அதிகம் பயன்படுத்தும் சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களால் வேகமாக சொற்களை உள்ளீட்டுக் கொள்ள முடியும்.
  • சொல் திருத்தி தமிழிற்கு உகந்ததாக அமைக்கப்பட்டது. தமிழ் இலக்கணத்திற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது. இதனால் பல சொற்களுக்கான திருத்தங்களை எளிமையாக திருத்தும் வசதி கொண்டது
  • Enhanced SEF (Smart Editing Function) என்னும் தொழில் நுட்பத்தால் தமிழ் மொழிக்கு உகந்த வாறு உயிரெழுத்து விசையின் பயனை அமைத்துள்ளோம். இது வேகமாக உள்ளீட்டுக் கொள்ள வசதியாக அமைந்திருக்கும்.
  • தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்துள்ள "Auto Pulli" வசதி உள்ளடங்கியது.
  • TAM / TAB உரு கொண்ட கோப்புகளை தானியங்கியாக ஒன்றியல் குறிக்கு மாற்றும் தன்மை கொண்டது.
  • புது பதிப்பு வெளியிடும் போது தானியங்கியாக புதிப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
  • உரிமை லைசென்ஸ் வாங்கினால் மேலும் 6 ஒன்றியல் குறி உருக்கள் தரப்படும்.

...மற்றும் பல.