Microsoft Windows-XP யிலிருந்து 8.1 வரை மட்டுமே பயன்படுத்தலாம்

 

எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.

Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

கம்பன் செயலி KWP 3.03 யின் முக்கிய செயல்பாடுகள்:

 

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளீட்டு.
  • ஒலிப்பியல் விசைப்பலகை - ஆங்கிலத்தில் அடிப்பதை தமிழில் மாற்றும் திறன்
  • பட்டியல், அறிவிப்பு பெட்டி, உரையாடல் பெட்டி, உதவி ஆகியவைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்ந்தெடுக்கும் வசதி.
  • தானியங்கியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்களை திருத்தும் வசதி. சொற்களை திருத்தும்போது, தமிழ் / ஆங்கிலம் மொழிகளை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தவாறு அகராதியை தானியங்கியாக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தொழில்நுட்பம்.
  • தானியங்கியாக பொருளடக்கம் செய்யும் முறை. பக்கங்கள் எண்களையும் தானியங்கியாக கூட்டும் தன்மை கொண்டது
  • பல வகை தரத்தில் பதிவு செய்யும் தன்மை: - KWP, RTF, HTML, TAM, TAB, TSCII & Text.
  • படிமம், படம், அட்டவணை ஆகிவகைகளை செருகும் தன்மை.
  • செய்திதாள் போன்று பல நெடுவரிசைகள் அமைப்பு.
  • அடிச்சொற்கள் பொருத்தும் தன்மை (footnotes).
  • பல வகை வடிவமைப்பு, உருக்கள், எழுத்துக்களின் முன்புலம், பின்புலம் அமைப்பு.
  • தேடு, மாற்று, வேறு பக்கத்திற்கு செல், ஏட்டுக்குறி வசதிகள்.
  • RTF தரத்திற்கேற்றவாறு ஏட்டுக்குறி அமைப்பு.
  • Windows 2000 போன்ற தோற்றம்.
  • தமிழர்களுக்கு வசதியாக 200-க்கும் மேற்பட்ட படிமங்கள்.
  • தலைப்பு பகுதியும் அடிப்பகுதியும் தொகுக்கும் வசதி.
  • முதல் பக்கத்திற்கான தனிப்பட்ட தலைப்பு மற்றும் அடிப்பகுதி.
  • பொட்டு மற்றும் எண்ணியல் அமைப்பு.
  • அளவுக்கோல், விவரப்பட்டை, வடிவமைப்பு பட்டை மற்றும் கருவிப்பட்டை.
  • பத்தி அமைப்பு, பத்திக் கொத்து மற்றும் தத்தல்கள்.
  • பல பகுதி அமைப்பு.
  • தொங்கும் முதலெழுத்து.
  • 25 வித உருக்கள்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ள பத்தியில் உரு மாற்றும் போது மொழியின் தன்மை மாறாமல் சமயோசிதமாக உரு மாற்றல்.
  • 5 வகை விசைபலகைகள்: கம்பன், TN99, DOE, தட்டச்சு மற்றும் ஒலிப்பியல்.

....மற்றும் பல