- Description
- Specifications
- Post a comment
மாதத்தில் நான் மார்கழி என்றான் கண்ணன், கீதையில். ஆகையால் இது மற்ற மாதத்தை விட சிறப்பு மிக்க மாதமாகும். புனிதமான இம்மாதத்தில் நீராடி, விரதமிருந்து, பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னால் ஆனவள், பட்டர்பிரானுடைய திருமகள்,
கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடினால் அல்லது படித்தால், எங்கும் திருவருள் பெற்று இருப்போம். இதை ஆண்டாளே தன்னுடைய கடைசி பாசுரத்தில் கூறியுள்ளாள். இங்கு பெரும்பூதூர் மாமுனி
– ஸ்ரீபெரும்புதூரில் தோண்றிய ஸ்ரீஇராமானுஜர் - ஆண்டாள் பிறந்து நான்கு நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தாலும், ஆண்டாள் எம்பெருமான் திருக்கரங்களைப் பற்றியதும், அவளுக்கு சீதனமாக செய்ய வேண்டியவகைகளை முன்னிருந்து இவர் செய்ததால் தமையனாக கருதப்படுகிறார்