- Description
- Specifications
- Post a comment
TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், KWP3.03 கோப்புகளை RTF வடிவூட்டலுக்கு மாற்றவும் இதை வெளியிட்டுள்ளோம். பல வருடங்களாக எமது நுகர்வோர்
உபயோகித்து வரும் KWP 3.03 செயலியை தற்சமயம் உலவி வரும் MSWORD போன்ற செயலிக்கு மாற்ற இப்பயன்பாடு உதவியாக இருக்கும். கோப்புகளை "*.RTF" மற்றும் "*_UC.RTF" என இருவகையாக பிரித்து பதிவு செய்வதன் மூலம் அரசாங்கம் பறிந்துரைத்த அச்சுக்குறியும், ஒன்றியல் அச்சு குறியும் தனிதனியாக பதிக்கப்படுகின்றன. பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருள், பழைய செயலியில், உருவாக்கப்ப பட்ட கோப்புகளை எளிமையாக ஒன்றியல் குறிக்கு மாற்ற உதவியாக இருக்கும். இதை உபயோகிப்பதன் மூலம் பழைய கோப்புகளை மாற்றி அடுத்த தலைமுறைக்கு தயாராகுங்கள். முக்கியமாக இதை உபயோகிப்பதற்கு KWP 3.03 உங்கள் கணினியில் பதிவு செய்திருக்கத் தேவையில்லை!
கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.
கம்பன் ஒன்றியல்குறி மாற்றின் செயல்பாடுகள்:
- எளிய முறையில் உபயோகிக்கும் முறை
- கம்பன் கோப்புகள் அனைத்தும் எளிய முறையில் மாற்றும் வசதி
- TN99 பரிந்துரைத்த TAM / TAB அச்சுகுறிகளை ஒன்றியல் குறிகளுக்கு மாற்றும் திறன்
- KWP 3.03 - கம்பன் செயலி - உங்கள் கணினியில் இருக்கத் தேவையில்லை.
- TAM / TAB அச்சுக்குறிகள் உங்கள் கணினியில் இருக்கத் தேவையில்லை.
- ஓரோர் கோப்பாகவும் அல்லது மொத்த கோப்புகளையும் மாற்றும் திறன் - Batch Processing.
- தமிழ் எண்களுக்கு மாற்றும் திறன்
- தமிழின் பிரத்யேக மாத - எண் குறிகளை மாற்றும் திறன்
- மாற்றப்படும் கோப்புகளின் போது செயல்முறையின் குறிப்புகளை பதிக்கும் திறன் - Log File
...மற்றும் பல.